விசிக -வில் பொறுப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ! மாவட்டச் செயலாளர்களை மாற்றப் போகும் திருமா

கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான தலைவர் எழுச்சித் தமிழரின் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் கட்சியின் 234 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட உள்ளது. தற்போதைய 144 மாவட்டச் செயலாளர்களில் புகார் உள்ளவர்கள், பணி செய்யாதவர்கள், மற்றும் எல்லை பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சிலர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவர்.

புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

புதியதாக நியமிக்கப்பட இருக்கும் 234 மாவட்டச் செயலாளர்கள் அந்த தொகுதியின் பெயரில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இதற்கான பொறுப்புக்கான பரிந்துரை குழு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்பட உள்ளது.

பொறுப்புக்கான விண்ணப்பம் மற்றும் கட்டண விவரம்

புதிய பொறுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பரிந்துரை குழுவிடம் தமிழ்மண் சந்தா ரூ.2000 மற்றும் பொறுப்புக்கான ரூ.1000 டி.டி எடுத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும். ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகத்திற்கும் மற்றும் அணிகளின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்புகளுக்கும் இந்த பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.

மாவட்ட நிர்வாகத்தின் பதவிகள்

புதிதாக நியமிக்கப்படும் மாவட்ட நிர்வாகத்தில், மாவட்டச் செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட துணைச் செயலாளர்கள், மாவட்ட செய்தி தொடர்பாளர், செயற்குழு உறுப்பினர், மகளிர் அணி செயலாளர், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் இடம் பெறுவர். இதில் குறைந்தது 9 பேரும் அதிகபட்சம் 11 பேரும் இடம் பெறுவார்கள்.

ஒன்றிய நிர்வாகத்திற்கான நியமனம்

கட்சியில் பிரிக்கப்பட்ட ஒவ்வொரு ஒன்றிய நிர்வாகத்திற்கும் ஒரு மாவட்டத் துணைச் செயலாளர் அடிப்படையில் நியமிக்கப்பட இருக்கிறார். ஒரு சட்டமன்ற தொகுதிக்குள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்றிய நிர்வாகம் பிரிக்கப்பட்டால், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு மாவட்ட துணைச் செயலாளர் நியமிக்கப்படுவார்கள்.

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி

நவம்பர் 15க்குள் அனைத்து நிலை பொறுப்புகளுக்கும் பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட அடிப்படையில் பரிந்துரை குழுக்கள் அமைக்கப்பட்டு, மேலும் 5 மண்டல உயர்நிலைக் குழுவும் வடமண்டலம், மேற்கு மண்டலம், மைய மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலம் என அமைக்கப்பட இருக்கிறது.

தற்போதுள்ள 144 மாவட்டச் செயலாளர்களில் சிலர் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் இருப்பதால், அந்த பகுதிக்குள் வரும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உயர்நிலைக் குழுவுடன் கலந்துரையாடி சரியான முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும்.

பொறுப்புக்கான ஒத்துழைப்பிற்கான வேண்டுகோள்

எந்த முடிவாக இருந்தாலும், கட்சியின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மது ஒழிப்பு மகளிர் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்று வெற்றி அடைந்திருக்கிறது அதைத்தொடர்ந்து மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாவட்டம் தோறும் அல்லது ஒருங்கிணைந்த மாவட்டமாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கும் வகையில் மகளிர் அணியை ஒன்று திரட்டி விளக்கப் பொதுக் கூட்டத்தை அரங்க நிகழ்வாக   மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இதர பொறுப்பாளர்கள்  ஒருங்கிணைக்க வேண்டும்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாவட்டம் தோறும் துண்டறிக்கைகளாக அச்சிட்டு  அனைத்து இடத்திலும் செய்தி போகும் படி கிராமம் கிராமமாக கொண்டு சேர்க்க வேண்டும்.

கடைசியாக நான் மாநாட்டில் பேசியது ஐயா வைகுண்டர் பற்றிய தீர்மானம் அந்த தீர்மானத்தை இன்று என் முகநூலில் பதிவேற்றுகிறேன் அதையும் நீங்கள் அச்சிடும் துண்டறிக்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

அதனை அடுத்து ஒரு ஒன்றியத்திற்கு மது ஒழிப்பு மகளிர் குழுவை அமைத்திட வேண்டும் இது மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் அமைக்க வேண்டும்.

மேலும் படிக்க:

Post a Comment

Please be pollte while you write a comment for this blog post

Previous Post Next Post