முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகி விவசாயம் மற்றும் ஆன்மீகத்தில் முழுமையாக மூழ்கியுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திருமா அவர்களையும் புகழ்ந்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்
பூங்குன்றன் எழுதிய பதிவு:
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒரு .. அதைப் பார்த்த நான் இவர் காட்டாயம் அரசியல் வானில் நட்சத்திரமாக மிளிர்வார் என்று யூகித்தேன். எனது யூகம் சரியானது என்பதை இன்று நான் உணர்கிறேன்.
நிதானமாகவும், கவனமாகவும் அதே நேரத்தில் சாதுர்யமாகவும் நடந்து கொள்ளும் தலைவர்களில் திருமாவும் ஒருவர். அவருடைய பேச்சு ஒடுக்கப்பட்ட மக்களின் கவனத்தையும், அவர்களது மன வேதனையையும் தன்பக்கம் அறவனைத்துக் கொண்டது.
படிப்படியாய் முன்னேறி இன்று பலமான இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த இடத்தைப் பிடிக்க அவர்பட்ட அவமானங்கள், தோல்விகள், வேதனைகள் அதிகம் இருக்கும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவருடைய புகழ் மட்டுமே தெரியும். உடனிருந்து பார்ப்பவர்களுக்குதான் அவருள் இருக்கும் வலி புரியும்.
சகோதரர் திருமாவின் அரசியல் திறமை:
ஷேர் மார்கெட்டில் ஏறி இறங்காமல், நிலையாக ஏறி இறங்கி ஏறிக்கொண்டிருக்கும் TATA போன்ற பாரம்பரிய கம்பெனிகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பார்கள்.
அதுபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடு கூட்டணி வைப்பது என்பது பாதுகாப்பான ஒன்று என்று தனது சொல்லாலும், செயலாலும் உணர்த்தி வருகிறார் சகோதரர் திருமா அவர்கள். ஆவேசப்படாமல் அழகாக தன் கட்சியை உற்சாகத்தோடு வழி நடத்தி வருகிறார். தனது வேகத்தை இன்று விவேகமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். தன்னை நம்பியவர்களை உயர்த்துவதற்கு உழைத்து கொண்டிருக்கிறார்.
ஒரு கட்சியின் தலைவராக உருவாவதே சாதனை! அதிலும் தொடர்ந்து தலைவராக நீடிப்பது ஒரு செயற்கரிய செயல். அது ஒரு சிலருக்குத்தான் வாய்க்கும். அந்த ஒருசிலரில் திருமாவும் ஒருவர். தனது ஆற்றல்மிகு பேச்சால் பார்ப்பவர்களை கட்டிப்போடும் சொல்லுக்குச் சொந்தக்காரர்;
பார்ப்பவர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் வார்த்தைகளின் முதலாளி. தமிழகத்தில் காலூன்றிய நிலையில் அகில இந்திய அளவில் வளர ஆர்வம் கொள்கிறார் என்றே நினைக்கின்றேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்துவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பை பெற்றுவிடலாம் என்று மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நினைக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அவரின் வளர்ச்சியை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..!
எதிர்கால அரசியலில் திருமாவின் நிலை:
'தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை படிப்பினையாக ஏற்று, அடுத்த நிகழ்வுகளைச் சந்திக்கிறவர் சாதிக்கிறார்' என்பதற்கு சகோதரர் திருமா - ஒரு உதாரணம். வரும் தேர்தலில் இவருடைய கட்சிக்கு முக்கிய பங்குண்டு. இவரைத் தேடியே அரசியல் நகரும். அரசில் பங்குபெறும் அளவுக்கு உயரும் நிலை உருவாகலாம். ஏன்? துணை முதல்வர் பதவி கூட இவரை நாடி வரலாம்.
மேலும் வீடியோக்களை பார்க்க: