விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் 90களில் எழுதிய கொள்கை முழக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
💛பாதையில் குறுக்கிடும் தடைமீறு! - அதிரடிப் பாய்ச்சலில் படைத்திடு வரலாறு!
💛சேரிப்புயல் ஒருநாள் வரம்புமீறும்! வரலாறு மாறும்!
💛சிறை சிறுத்தைகள் ஓய்வெடுக்கும் குகை!
💛அடக்க நினைத்திடும் சிறைச்சாலை! - எமக்கு அரசியல் கற்பிக்கும் பாடசாலை!
💛மூளும் இங்கே விடுதலை நெருப்பு! - திசை நாலும் நாறும் சாதிக் கொழுப்பு!
💛தலைநிமிரச் சேரி திரளும்! - அன்று
தலைகீழாய் நாடு புரளும்!
💛குடிசைவாழ் மக்கள் குமுறி எழுந்தால் கோட்டை மேடும் குப்பை மேடாகும்!
💛பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்ன செய்யும்?
💛சட்டம்-அது எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும்! வலியவனைக் கண்டால் வளைந்து கொடுக்கும்!
💛வாள் கைமாறும் போதுதான் நம் வாழ்க்கையே மாறும்!
💛அடித்தட்டு மக்களின் நிலை மாற வேண்டும்!- அதற்கு அரசியல் அதிகாரம் கைமாற வேண்டும்!
💛எரிபடும் சேரிகளில் இடிபடும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி!
💛உன்னைப் படி!- தாய் மண்ணைப் பிடி!
💛தீர்க்கமாய் முடிவெடு! திட்டமிடு| திமிறிஎழு! திக்கெட்டும் பற்றிப் படர்! தீயாய்ப் பரவு!
💛சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை! இன்று எமது இயக்கக்கொடி! நாளை நமது நாட்டை ஆளும் கொடி!
💛 இப்போது நாங்கள் ஆடுகளல்ல சீறிப்பாயும் விடுதலைச் சிறுத்தைகள்!
💛அடங்க மறுப்போம்! அத்து மீறுவோம்! திமிறி எழுவோம்! திருப்பி அடிப்போம்!
💛விழிப்பாய் இரு! நெருப்பாய் எழு
💛ஒருநாள் நிச்சயம் விடியும்! -அது உன்னால் மட்டுமே முடியும்!
💛திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது! திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது!
💛விடுதலை கிடைப்பது யுத்தத்தால்! - புதிய விதிகள் பிறப்பது ரத்தத்தால்!
💛சிந்திய ரத்தம் வீண்போகாது! - விடுதலைச் சிறுத்தைகள் படையோ பின்வாங்காது!
💛விழ விழ எழுவோம்! வீழ்ந்து விடமாட்டோம்! விடுதலைப்பாதை விட்டு விலகிவிட மாட்டோம்!
💛எதனையும் எதிர்கொள்ள இருவிழிப்பாய்! வானுயர் இமயம்போல் தடைவரினும் எகிறிப்பாய்!
💛அடக்கப்பட்டோரை உசுப்புவோம்! - அரசின் அதிகாரத் திமிரை அடக்குவோம்!
💛அச்சம் தவிர்த்துச் சினந்து கிளம்பு! - சாதியமைப்பின் உச்சந்தலையில் இடியாய் இறங்கு!
💛நெருக்கடிகள் சூழ்ந்த போதும் - கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்! நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறிப் பாய்தல் தீரம்!
💛சேரியில் புரட்சியின் சினைவெடிக்கும்! - ஆதிக்கவெறிச் சாதியத்தின் தலைநறுக்கிப் பகைமுடிக்கும்!
💛இருட்டும் திருட்டும் ஒரு முடிவுக்கு வரும்! நல்ல எதிர்காலமும் அதிகாரமும் நம் கைகளுக்கு வரும்!
💛எரிமலை நெருப்பை அணைக்கவா முடியும்? மக்கள் விடுதலை எழுச்சியை அடக்கவா முடியும்?
💛அடங்கா மதயானையைப்போல் அதிரடி கலகம்செய் அழிவிலே ஆக்கமுண்டு ஆகவேநீ தியாகம்செய்!
💛உலகத்தை விடியவைக்கும் உழைக்கின்ற வர்க்கம்! ஒருபோதும் கலகத்தை நடத்தாமல் கண்டதில்லை மார்க்கம்!
💛இழப்புகள் எவையாயினும் ஏற்றுக்கொள்வோம்!- நம்மை இடைமறிக்கும் சவால்களை எதிர்கொள்வோம்!
💛வளர்ச்சிக்குரிய மாற்றங்களுக்கு வழிவகுப்போம்! - புரட்சிகர வரலாற்றைப் படைப்பதற்கு வாள் எடுப்போம்!
💛கொண்ட கொள்கையில் உறுதியைக் காட்டுவோம்!-தேவையெனில் கொள்கை சிதையாமல் உத்தியை மாற்றுவோம்!
💛கடைசி மனிதனின் கண்களில் கண்ணீர் மட்டுமல்ல; கனலும் தெறிக்கும்! எம் பதிவுகள் வெறும் கண்ணீர்த்துளிகளல்ல! கலகத்தின் சினைகள்!
💛அத்துமீறிச் செயல்படாமல் அடிமைத்தனை அறுபடாது! குமுறி ஆத்திரங்கொண்டெழாமல் உன் அடுத்தவாரிசு உருப்படாது!
💛அரசியல் சக்தியாய்த் தொழிலாளர்கள் ஆர்த்தெழவேண்டும்! ஆதிக்கத்தையும் தூர்துரும்போடு அறுத்தெறிய வேண்டும்!
💛இந்துப் பெயர்களை மாற்றுவோம்! - தமிழில் இனிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!
💛இந்துத்துவத்தை வேரறுப்போம்! - ஆதிக்கத்தால் இழந்தமுகத்தை மீட்டெடுப்போம்!
💛அடித்தட்டு மக்களை அரசியல்படுத்துவோம்!-சாதிய அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
💛தமிழனுக்குத் தேவை தன்னுரிமை! தலைநிமிரத் தேவை மண்ணுரிமை!
💛தாயகம் தேசியம் தன்னாட்சி வெல்வோம்! -அதுவே தமிழர் இறையாண்மை; உலகுக்குச் சொல்வோம்!
💛அமைப்பாய்த் திரள்வோம்! அங்கீகாரம் பெறுவோம்! அதிகாரம் வெல்வோம்!
💛கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவோம்! கட்சிக்கான அங்கீகாரத்தை வென்றெடுப்போம்!
💛அடுத்த பாய்ச்சலுக்கு அணியமாவோம்!- நமது அடுத்த தலைமுறையை அணியமாக்குவோம்!
💛கொள்கை வெல்லக் களமாடுவோம்! ஆளும் கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்!
💛தலித் அரசியல் தலைமை நாட்டுவோம்!-நாட்டைத் தலைகீழாய்ப் புரட்டத் தோழமை போற்றுவோம்!
💛வெறுப்பின்றிச் சலிப்பின்றி விடுதலைக்கு உழைப்போம்! - நம்மை வெறுப்பவர்கள் சுமத்துகின்ற வீண்பழிகளைத் துடைப்போம்!
💛புதைந்த வரலாற்றை மீட்டெடுப்போம்! இழந்த விடுதலையை வென்றெடுப்போம்!
💛தேவையை உணராமல் போராட முடியாது!- களத்தில் போராடத் தெரியாமல் நீவாழ முடியாது!
💛அமைப்பாவதால் மட்டும்தான் அத்துமீற முடியும்! அத்துமீறலால் மட்டும்தான் அடக்குமுறை உடையும்!
💛போராட்டம் தான் வரலாறு!-நமது வரலாற்றைப் பதிவதே பெரும்போராட்டம்|
💛புலம்புவது கேவலம்!-துணிந்து புறப்படு போர்க்களம்!
💛இக்காலத் தலைமுறை தியாகம் புரியட்டும்! வருங்காலத் தலைமுறை நாட்டை ஆளட்டும்!
💛கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!
💛அரசு அதிகாரம் அனைவராலும் உருவானதாகும்! -எனவே ஆட்சி அதிகாரம் அனைவருக்கும் உரியதாகும்!
💛மதுவை ஒழிப்போம்! மக்களைக் காப்போம்!
💛கருத்தியலை ஆழமாக வேரூன்றச் செய்வோம்! களப்பணிகளைத் தீவிரமாக மேலோங்கச் செய்வோம்!
💛ஆயுதமில்லாமல் போர்க்களத்தில் களமாட முடியுமா? ஊடகமில்லாமல் அரசியல்களத்தில் போராட முடியுமா?
💛துரோகம் துள்ளும்!
தூய்மையே வெல்லும்!
💛சாதியத்தை வேரறுப்போம்! - தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம் தோழமைக் கூறுகளைச் செழுமைப்படுத்துவோம்! தொலைநோக்கில் நட்புறவை வலிமைப்படுத்துவோம்!
💛இடஒதுக்கீடு மோசடிகளை முறியடிப்போம்! எளிய மக்கள் ஒற்றுமையை முன்னெடுப்போம்!
💛சேர்ந்து நடப்பது மானுட தருமம்! சார்ந்து கிடப்பது மநுவின் தருமம்! மானத்தை இழக்காமல் மானுடம் காப்போம்!
💛இயக்கத்தின் மூலம் போர்க்குணத்தை வளர்ப்போம்! இதழின் மூலம் ஆளுமைஉணர்வைப் பெறுவோம்!
💛ஏழை - எளியோருக்கு அரசியலிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு!
💛எங்களை ஏளனமாய் எண்ண முடியாது! இழிவாய் நடத்த முடியாது!
💛சாதியத்தைச் சாம்பலாக்குவோம்! கயர்லாஞ்சிக் கொடுமைகளைக் கருவறுப்போம்!
💛கருத்துரிமை பறிபோனால் அடிமைத்தனம் வேர்விடும்!-அந்தக் கருத்துரிமை மீட்டால்தான் கைவிலங்கு அறுபடும்!
💛அதிகார மையங்களைக் கைப்பற்றுவோம்!-ஆளுமையை அனைத்துத் தளங்களிலும் நிலைநாட்டுவோம்!
💛உள்ளும் புறமும் ஓயாது போர்தொடுப்போம்! - நம் ஒற்றுமை சிதையாமல் உரிமைகளை வென்றெடுப்போம்!
💛நல்லிணக்க முயற்சிகளால் நல்லுறவு பூக்கும்! - அது நாடு மொழி இனநலன்களையும் காக்கும்!
💛தனிநபர் பங்களிப்பின் வலிமையை உணர்வோம்! - வலுவான தலைமையைக் கட்டமைக்கும் கடமையைச் செய்வோம்!
💛அடித்தட்டு மக்களை அரசியல்படுத்துவோம்! - சாதிமத அரசமைப்பின் அடிப்படையை அம்பலப்படுத்துவோம்!
💛தேசம் காப்போம்! - திருமா தலைமை ஏற்போம்!
💛மாநில உரிமைகள் பறிப்பைத் தடுப்போம்! மத்திய அதிகாரக் குவிப்பைத் தகர்ப்போம்!
💛பனைகள் விதைப்போம்! - தமிழர் பாரம்பரியம் காப்போம்!
💛சனாதனத்தை வேரறுப்போம்! - புரட்சிகர சனநாயகத்தை வென்றெடுப்போம்!
💛மக்கள் விடுதலை மண்டியிட்டுப் பெறுவதல்ல! மடுவை மலையாக்கு! மண்ணைச் சிவப்பாக்கு!
💛உள்ளும் புறமும் ஓயாது போர்த்தொடுப்போம் - நம் ஒற்றுமை சிதையாமல் உரிமைகள் வென்றெடுப்போம்!
💛சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை! - அதுவே சமத்துவம் காணும் உரிய வழிமுறை!
இந்த முழக்கங்கள், 90களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக மாற்றத்திற்கான ஒரு போராட்டத்தை நடத்தும் போது எழுத்து வடிவத்தில் வெளிப்பட்டவை. தொல் திருமாவளவனின் எழுத்துக்களால் சமூகத்தின் அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன், மக்களின் மனதில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கின.
Tags
political