மகர்ராஷ்டிர தேர்தலில் பாஜக வெற்றிக்கு அடித்தளம் என்பது பால்தாக்கரே வின் இந்துத்துவா அரசியல் விதைத்த விதைத்தான் என்பதை மறந்து விடக்கூடாது
பால் தாக்கரே விதைத்த இந்துத்துவா அரசியலை பாஜக நன்கு வளர்த்தெடுத்து அறுவடை செய்கிறது.
இந்தியாவின் பெரிய வணிக மையமாக இருப்பது மும்பை. ஆனால் மும்பையில் வணிகத்தின் ஆதிக்கத்தில் குஜராத்திகளே கொடிகட்டி பறக்கிறார்கள்.
மண்ணின் மைந்தர்களான மகர்ராஸ்டிரா மக்கள் பெரும் வணிகத்திலிருந்து அந்நியப் பட்டு கிடக்கிறார்கள்.
பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மும்பையில் வசித்தாலும், அங்கே ஆட்டோ ஓட்டுனரிலிருந்து சிறு வணிகம் மற்றும் பெரும் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்துவது குஜராத்திகளே.
ஆகவே, இந்துத்துவ அரசியல் அங்கு நன்கு வளர்த்தெடுக்கப்படுவதற்கு, குஜராத்திகள் தங்களுக்கான வணிக ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக தான். அது இன்றைக்கு மகர்ராஷ்டிரா முழுவதும் பாஜக விற்கு கை கொடுத்திருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கும் உயர்சாதி இந்துக்களுக்குமான வணிகப் போட்டி என்பது திட்டமிட்டு மதவெறி சக்திகள் இந்துத்துவா வெறியை வளர்த்தெடுத்தார்கள்.
அதுவே,இன்றைக்கு பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறது.சிவசேனாவின் ஷிண்டே அணியும், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் அணியும் பாஜகவின் வெற்றிக்கு பெரிதும் உதவி இருக்கிறது.ஷிண்டேவின் வரலாறும் அஜித் பவாரின் வரலாறும் நாடறிந்தது.
காங்கிரசு தனது தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு இலவச பேருந்து விவசாய கடன் தள்ளுபடி, மாத உதவித்தொகை ரூ.3000/= என்றெல்லாம் அறிவித்த பிறகும், காங்கிரசு அணி வெற்றி பெறாததற்கு பாஜகவின் மதவாத அரசியல் தான் காரணம்.
ஒப்பிட்டளவில் பாஜகவின் தேர்தல் அறிக்கை விட காங்கிரசின் தேர்தல் அறிக்கை சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்டு ராகுல் காந்தி பேசியது நினைவிருக்கிறது. இது சனநாயகத்திற்கான போர் என்று அறிவித்தார்.
ஆனாலும்,காங்கிரசு தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் சனநாயகத்திற்கும் சனாதனத்திற்கும் நடந்த யுத்தத்தில் சனநாயகம் தோற்கடிக்கப்பட்டு விட்டது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாவலன், சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை தொடர்ந்து பகிர்ந்து வருபவர். இந்தத் தொகுப்பில், அவர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு ஒரு பதிவு செய்துள்ளார்.
மேலும் வீடியோக்களை பார்க்க: