திருமா வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! பொறுப்புக்கு பதிவு செய்ய கடைசி தேதி

டைபெற்று வருகின்ற நிர்வாக_மறுசீரமைப்பு பணிகள் குறித்து தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் இன்றைய முகநூல் நேரலையில் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்

மேலிட பொறுப்பாளர்களுக்கு சில தகவல்கள்..

நடைபெற்று வருகின்றன பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களை தருகிற நடவடிக்கை இப்போது தீவிர படுத்தப்பட்டுள்ளன, நாள்தோறும் சமூக ஊடகங்களில் அந்த பதிவுகளை பார்க்கிற போது மகிழ்ச்சி அடைகிறேன் மீண்டும் மீண்டும் அந்த விளக்கமும் உங்களுக்கு தேவைப்படாது என்றும் நான் நம்புகிறேன்..

அது வழக்கமான ஒரு செயல் திட்டம் தான் புதியது அல்ல ஒரு சிலருக்கு இது புதியதாக இருக்கலாம் மாவட்ட நிர்வாகத்தை சீரமைப்பதற்கான தேவையை உணர்ந்து கொள்வது புதிது புதிதாக என்னென்ன கோரிக்கைகள் தோழர்களிடமிருந்து எழுகின்றனர் என்பதை களத்தில் உணர்ந்து கொள்வது போன்ற அனுபவங்களை பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் எனவே ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்ட அனைவரும் கட்டாயம் களத்தில் நிற்க வேண்டும்..

தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த கட்சியின் முன்னோடிகளை சந்திக்க வேண்டும், குழு சார்ந்த முரண்கள் எல்லாம் பகுதிகளிலும் இருக்கத்தான் செய்யும் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அவர்களுக்கு ஒரு சார்பு அணுகுமுறை ஒருபோதும் கூடாது உங்களை சந்திக்கிற தோழர்கள் மட்டும் இன்றி சந்திக்க வராத தோழர்கள் ஏன் சந்திக்க வரவில்லை என்பதையும் நீங்கள் கேட்டு அறிந்து அவர்களையும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்..

அவர்களோடு தொலைபேசி வாயிலாக பேசுவது நேரிலேயே சந்திப்பது அல்லது நிர்வாகிகளுக்கான கூட்டங்களில் அவர்களை பங்கேற்க வைப்பது அவர்களின் கோரிக்கைகளை கேட்பது அவர்களின் குறைகளை கேட்டு அறிவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மிகுந்த பொறுமையுடன் நிதானத்தோடும் மேற்கொள்ள வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த தோழர்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன்..

மாவட்ட நிர்வாகத்திற்கான பொறுப்புகளும் மற்றும் ஒன்றிய நகர பேரூர் பொறுப்புக்கான விண்ணப்பங்களையும் மற்றும் துணைநிலை அமைப்புகளுக்கான விண்ணப்பங்களையும்  பெற வேண்டும்.

அதிலே சில அமைப்புகளின் பெயர்கள் விடுபட்டிருக்கும் என்பது பின்னர் தெரியவந்தது அந்த விடுபட்ட அமைப்புகள் கீழே பின்வருமாறு.

1).மீனவர் மேம்பாட்டு பெயராயம்

 2).பழங்குடியினர் விடுதலை இயக்கம்

3)மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்

4).சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் 5).விளையாட்டுத்துறை 

ஆகியவை அந்த பட்டியலில் இடம் பெறவில்லை..

விளையாட்டுத்துறைகளை மேம்படுத்துவதற்கான அதிகம் புதிதாக நாம் இணைக்க இருக்கிறோம் அது இந்த புதிய அமைப்புகள் மற்றும் விடுபட்டு அமைப்புகள் ஆகியவற்றோடு இணைந்து புதிய திருத்தப்பட்ட துணைநிலை அமைப்புகளில் பெயர் பட்டியல்  முகநூல் பக்கத்தில் இன்று வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

நீங்கள் பொறுப்பிற்கான மற்றும் தமிழ் மண் சந்தாவிற்கு கட்டணம் செலுத்த ஏதுவாக QRகோடு எனது முகநூல் பக்கத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது அந்த QRகோடின் மூலம்  நீங்கள் பணத்தை செலுத்தலாம்..

இப்பொழுது நேரில் விண்ணப்பம் செலுத்த முடியாதவர்கள் இணையத்தில் விண்ணப்பம் பதிவு செய்யும் வகையில் உங்களுக்கு ஏதுவாக அது சில தினங்களில் அமைத்து தரப்படும்.

மாவட்ட நிர்வாகத்திற்கும் துணைநிலை அமைப்பிற்கும் நகர ஒன்றிய  பேரூர் நிர்வாகத்திற்கும் அனைத்திற்கும் நீங்கள் நவம்பர் 30க்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்...

கட்சி உட் கட்டமைப்பில் அதிகார பரவலை விரிவுபடுத்த மறு சீரமைப்பு நடைபெற்று வருகிறது அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  கல்லூரி  மாணவர்களாக இருந்தாலும் நீங்களும் அதற்கு ஏற்றவாறு பொறுப்புகளை விண்ணப்பிக்கலாம் அதற்குத்தான் நாம் நிறைய அமைப்புகளை துணைநிலையில் சேர்த்திருக்கிறோம்....

தலித் அல்லாதவர்களும் பெண்களையும் இதில் முழுமையாக அவர்களை கொண்டு வர வேண்டும்..

மாநிலத் துணைச் செயலாளர்: 

அரசியல் கள நகர்வுகளில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்கு மிக வலிமையானது என்று அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள் உணர்த்தி இருக்கிறோம்

சாதிய என்ற அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் இயங்கவில்லை அனைத்து மக்களுக்கான களத்திலும் நாங்கள்  குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் பொது நீரோட்ட வாழ்வியலிலும் கலந்து இருக்கிறோம் அதன் வடிவில் அனைவரும் விடுதலை சிறுத்தைகளை இன்று அங்கீகரித்திருக்கிறார்கள்..

எதிர்வரும் காலங்களில் அரசியல் என்ற மிகப்பெரும் வாழ்வியல் சொல்லாடலை விடுதலைச் சிறுத்தைகள் தலைமை இல்லாமல் இயங்காது என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறோம் நிரூபித்து காட்டுகிறோம் 

அறிவார்ந்த தத்துவத் தலைமை எழுச்சித் தமிழர் அவர்களின் வழியில் இன்னும் பன் மடங்கு உழைப்போம் கட்சியை உயர்த்துவதற்கான நோக்கம் மட்டும்  அல்ல கட்சியின் கொள்கையின் முழக்கங்களை உச்ச நிலை அடைய..

அயராது எழுச்சித் தமிழர் வழியில் உழைப்போம் என்று உறுதி ஏற்போம்..

Post a Comment

Please be pollte while you write a comment for this blog post

Previous Post Next Post