ஒருங்கிணைப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னணி தோழர்கள் உடனடியாக தங்கள் பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும்.
விண்ணப்பக் காலம் நீட்டிப்பு:
கட்சியின் பொறுப்புகளை ஏற்க விரும்பும் தோழர்களுக்கு விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாளாக ஏற்கனவே நவம்பர் 20 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய சூழலில், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, விண்ணப்பக் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மேலும் பலருக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியப் பொறுப்புகள்
ஒருங்கிணைப்புக் குழுவினர் பின்வரும் பணிகளை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்:
1. கட்சி மற்றும் துணைநிலை அமைப்புகளுக்கான பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுதல்.
2. ‘தமிழ்மண்’ இதழுக்கான வாழ்நாள் கட்டணத்தை செலுத்திய சான்றுகளைக் கையகப்படுத்தல்.
3. பொறுப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணச் சான்றுகளை சேகரித்தல்.
4. விண்ணப்பதாரர்கள் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்புகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களைப் பெறுதல்.
மேலும், ஒருங்கிணைப்புக் குழுவினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, செயல்திட்டங்களை வகுத்து, பணிகளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கான வழிகாட்டுதல்கள்:
மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்புகளுக்கு விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.
ஊராட்சி செயலாளர் பொறுப்பிற்கு விண்ணப்பம் பெற வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அந்தப் பொறுப்பு நியமிக்கப்படுவதில்லை.
மண்டலப் பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களைத் திறம்படக் கோர வேண்டும்.
தலித் அல்லாதோர், இளையோர் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவது முக்கியம்.
கட்டண செலுத்தும் வழிமுறைகள்
‘தமிழ்மண்’ இதழுக்கான கட்டணங்களை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான க்யூஆர் கோட் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது இயக்கத் தோழர்களுக்கு ஏதுவாக முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும். கட்டணங்கள் ‘தமிழ்மண்’ வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
கட்சி கட்டமைப்பை வலுப்படுத்திட விழிப்புடன் செயல்படுங்கள்
மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவேற, ஒருங்கிணைப்புக் குழுவினர் முழுமையான நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பணிபுரிய வேண்டும். அனைத்து இயக்கத் தோழர்களும் இந்த முயற்சிக்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த முயற்சி அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவேறும்.
இவண்
தொல். திருமாவளவன்