கிரேஸ் பானுவின் "பாலஸ்தீனப் பறவை" நூலை வெளியிட்ட திருமா
byTHANIMAI PAYANAMM-
0
தனது உரையின் தொடக்கத்திலேயே, கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் மூலமாகவே ஒருவர் அதிகாரத்தை நோக்கி பயணிக்க முடியும் என்று கூறினார். மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் அதற்கு இட ஒதுக்கீடானது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.
க்ரேஸ்பானு ஒரு போராளி என்பதை தாண்டி, இப்பொழுது அவர் ஒரு எழுத்தாளரும் கூட என்பதில் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். தொடர்ச்சியாக அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளரும் என்பதை குறிப்பிட்டு பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருப்பவர்கள் மட்டும் தான் இடதுசாரிகள் என்று ஆகாது என்றும், அம்பேத்கரும் இடதுசாரி தான் என்றும், இட ஒதுக்கீடுக்காகவும், சமூகநீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் போராடுபவர்கள் அனைவருமே இடதுசாரி தான் என்று தெளிவுப்படுத்தினார்.
பின்னர் மேடையில் எழுதி இருந்த அம்பேத்கரின் பொன்மொழியை குறித்து பேசுகையில், வெறும் அம்பேத்கரின் உருவப்படத்தை மட்டும் பொறிக்காமல், அவர் அருகிலேயே அவரது துணைவியாரின் படத்தையும் பொறிக்க வேண்டும் என்கிற சிந்தனையை பாராட்டி மகிழ்ந்த அதே சமயம், இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குமே ஒரு பாடம் என்பதை சேர்த்தே பதிவு செய்தார். தொடர்ந்து அனைத்து விசயங்களிலும் பாலியல் சமத்துவத்துக்கு தரப்படும் முக்கியத்துவத்தை பாராட்டிய தலைவர் அவர்கள், ஆண் பெண் என்ற இருமையில் மட்டும் பாலியல் சமத்துவத்தை சுருக்கிவிட முடியாது என்றும், மற்ற பாலினங்களின் அடையாளத்திற்காகவும் க்ரேஸ் பானு மற்றும் அவர்களது இயக்க தோழர்கள் பணியாற்றுவதை போற்றினார்.
பொது வாழ்வில் இயங்கக்கூடிய தன்னை போன்றவர்களுக்கே இது ஒரு குறைபாடு என்றும், இத்தனை காலம் அதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்றும், இனி வரும் காலங்களில் தவறை திருத்திக்கொள்ள முயற்சிப்பதாகவும் உறுதி அளித்தார். மேலும் பொதுத்துறை, தனியார்துறை என அனைத்து துறைகளில் அனைவருக்கும் இட ஒதுக்கீடு என்று போராடுகிறோமே ஒழிய, அதில் திருநங்கையர் மற்றும் திருநர் சமூகங்களை பொருட்படுத்த தவறுகின்றோம் எனவும், அது மிகப்பெரிய ஓர் அநீதி என்றும் தெரிவித்த தலைவர் அவர்கள், அம்பேத்கர் கூறியதைப்போல, பாலின சமத்துவத்தை அடையாமல், பொருளாதார மற்றும் வர்க்க அரசியலை மட்டுமே முன்னெடுத்தால், அது சாணி குவியலின் மீது அரண்மனை கட்டுவதற்கு ஒப்பாகும் என்று குறிப்பிட்டார்.
கிரேஸ் பானுவின் "பாலஸ்தீனப் பறவை" நூல் வெளியீட்டு விழா
குடும்பம் தொடங்கி, சமூகம், ஆளும் வர்க்கம் வரை அனைவரும் ஒன்றிணைந்து திருநங்கையர்களை புறக்கணிக்கிறது என்றும், இழிவுப்படுத்துகிறது என்றும், போதாக்குறைக்கு கொடுமைப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்ட தலைவர் அவர்கள், ஆதலால் திருநங்கையர் இட ஒதுக்கீடுக்கான கோரிக்கை என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் முக்கியம் என்று பதிவு செய்தார்.
எவ்வாறு ஒரு பெண்ணின் வலியை ஒரு ஆணால் உணர்ந்து பேச முடியாதோ, எவ்வாறு ஒரு தலித்தின் வலியை தலித்தல்லாதோரால் உணர்ந்து பேச முடியாதோ, அதுப்போலவே ஒரு திருநங்கையின் வலியை, திருநங்கை அல்லாதோரால் உணர்ந்து பேச முடியாது என்று தெரிவித்த தலைவர் அவர்கள், தலித்தல்லாதோர் உணர வேண்டுமானால் தலித்துகள் அமைப்பாக வேண்டும், பெண்கள் அமைப்பாக வேண்டும், அதேப்போல் திருநங்கையர் சமூகமும் அமைப்பாக ஒன்றிணைய வேண்டும் என்றும், நம்மை நாமே அரசியல்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதுவே மற்றவர் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வழிவகுக்கும் என்று குறிப்பிட்டு, அது இன்றைய நாளில் ஒரு வரலாற்று தேவை என பதிவு செய்து தனது உரையை நிறைவு செய்தார்.
SC/ST சங்க விழா உரை
இந்திய வங்கியின் அகில இந்திய SC/ST சங்கத்தின் 42வது ஆண்டு விழாவில் கிரேஸ் பானு பேசுகையில், அரசியலமைப்பில் மதச்சார்பின்மை, சமத்துவம் போன்றவை கொள்கைகளாக மட்டுமே உள்ளது என்றும் நடைமுறையில் அவை குறைந்து வருவதாகக் கூறினார். தனியார்மயம் சமூகநீதி கோட்பாட்டை குறைக்கின்றது எனவும், இதனால் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் நெருங்கிய ஆபத்தில் உள்ளதாக எச்சரித்தார்.
உருது மொழி நாள் விழா உரை
சென்னை ராயப்பேட்டையில் நடந்த உருது மொழி விழாவில் பங்கேற்ற அவர், "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என சுந்தரனார் கூறியவை அனைத்தும் ஒரே உறவாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டினார். மொழிகள் கலப்பதன் மூலம் மனிதக் குலத்தின் ஒருமைப்பாட்டை இங்கு எடுத்துக்காட்டினார்.
விடுதலைச் சிறுத்தைகளில் இணைந்த புதிய உறுப்பினர்கள்
சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பல புதிய உறுப்பினர்கள், அதில் குறிப்பாக வழக்கறிஞர்கள் மற்றும் N.R. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அண்மையில் இணைந்தனர். இந்த நிகழ்வின் மூலம், 100க்கும் மேற்பட்டோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்கு தங்களது பங்கினைச் சேர்க்க முன்வந்துள்ளனர்.