மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் மற்றும், தோழர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் பொதுச் செயலாளர் சிந்தனைசெல்வன் ஆகியோர், சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை சுமூகமாகத் தீர்வளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
"பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடிய சாம்சங் தொழிலாளர்கள் மீது பதியப்பட்டிருக்கும் வழக்குகளையும், அந்த போராட்டங்களில் பங்கேற்ற இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டவர்கள் மீது பதியப்பட்டிருக்கும் வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும், மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறு குறு தொழில்கள் நலிவடையக்கூடிய வகையில் மின் கட்டண உயர்வு அதிகரித்து இருக்கிறது இதனால் மக்களும் சிறு குறு தொழில் முதலீட்டார்களும் தொழிலாளர்களும் பாதிப்படைந்து இருக்கிறார்கள், நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாம்சங் தொழிலாளர்கள் வழக்கில் தொழிலாளர் நலத்துறை சாம்சங் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படக் கூடாது" உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் உடனே நிரப்பப்படவேண்டும். தமிழக முதல்வருக்கு எழுச்சித்தமிழர் வேண்டுகோள்.
இந்த சந்திப்பின் நிறைவில் மருத்துவ துறையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் மற்றும் மருத்துவ துணைநிலை ஊழியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று கோரிக்கை மனுவை கொடுக்கும் நல்வாய்ப்பும் கிடைத்தது.
எழுச்சித்தமிழர் கோரிக்கையை தெளிவாக விளக்கி சொன்னார். அதனை கவனமாக உள்வாங்கிக்கொண்ட முதல்வர் அவர்கள் இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் உடனே முடக்கிவிடப்படும் என உறுதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து சிந்தனைச் செல்வன் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளார்
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு மருத்துவ தேர்வு ஆணை (MRB) 11.10.2020 அன்று அரசாணை 2/2022-ன் மூலம் தேர்வு அறிவிப்பு செய்து 25.04.2023 அன்று தேர்வு நடைபெற்றது.
தேர்வு முடிந்த பிறகு, கொரோனா நோய்ப்பரவல் காலத்தில் அரசு மருத்துவமனையில் வேலை செய்த மருத்துவர்களுக்கும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும், ஊக்க மதிப்பெண் வேண்டி உயர் நீதிமன்றத்தில் கட்டளை நீதிப்பேராணை மனு தொடுத்ததால், அரசாணை 278 மூலம் ஊக்க மதிப்பெண் 2 முதல் 5 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. 16,000 க்கும் மேலான மருத்துவர்கள் தேர்வு எழுதிய நிலையில் தேர்வு முடிவுகள் 06.01.2024 அன்று வெளியிடப்பட்டு 7000 க்கும் மேலான மருத்துவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
2 முதல் 5 ஊக்க மதிப்பெண்கள் வழங்கியதன் விளைவாகவும், 2018-க்கு பிறகு வைக்கப்பட்ட தேர்வு என்பதனாலும் ஒவ்வொரு 0.50 மதிப்பெண்ணுக்கும் இடையில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். தற்போது 1021 காலிப்பணியிடங்களுக்கு 986 மருத்துவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்நிலையில் 15.03.2024 மருத்துவ
தேர்வு ஆணை மீண்டும் அரசாணை 01/MRB/2024 மூலம் 2553 மருத்துவ காலி
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய அறிவிப்பை வெளியிட்டு, ஏழு மாத காலம் ஆகியும் தேர்வு தேதி இன்றளவிலும் குறிப்பிடப்படாமல் உள்ளது.
இதற்கு முன் மருத்துவ தேர்வு ஆணை மூலம் நடைபெறும் தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களை விட, இரு மடங்கு அதிகமாக மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். அதன் விவரம் பின்வருமாறு.
இதனிடையே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் அளிக்கப்பட மனுவின் மூலம், நவம்பர் 2022 வரை, 1752 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் பெறப்பட்டது. மேலும் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், 23.10.2024 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு, 4000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அதனை உடனடியாக நிரப்ப கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.
எனவே கருணை கூர்ந்து, மாண்பமை முதல்வர் அவர்கள்,
* மருத்துவ துறையில் ஏற்பட்டிருக்கும் 4000-க்கும் அதிகமான மருத்துவர்களுக்கான நிரப்பும் படியும், காலிப்பணியிடங்களை விரைந்து
* 15.03.2024 फ्री 01/MRB/2024 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்க்கான தேர்வு நடக்கும் வரை காத்திருக்காமல் தற்போது நடந்து முடிந்த MRB தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களை கொண்டு நவம்பர் 2022 வரை ஏற்பட்ட 1752 காலிப்பணியிடங்களை நிரப்பும் படியும்,
* 15.03.2024 தேதியிட்ட L 01/MRB/2024 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்க்கான தேர்வினை விரைந்தது நடத்தக்கோரியும்,
* மருத்துவ துறையில் உள்ள மருந்தாளுநர், செவிலியர் போன்ற இதர பிரிவில் ஏற்பட்டிருக்கும் காலிப்பணியிடங்களையும் நிரப்பும் படியும் நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன். சிந்தனைச் செல்வன் அவர்கள் தனது மனுவில் கூறியுள்ளார்
Tags
political