நடிகர் விஜய் அவர்கள், தனது முதல் மாநில மாநாட்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கெனும் கோஷத்தை முன்வைத்து, தமிழக அரசியலில் ஒரு புதிய அலை உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம் அவர் சாதி, மத, வர்க்க பிரிவினைவாதம் மற்றும் ஊழலை எதிர்த்து தன் அரசியல் சிந்தனைகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இது, தன்னை ஒரு சமூக நீதி பரப்பளாவராக காட்டும் வகையில் அமைந்துள்ளது.
விஜய் அவர்கள் பேசிய இந்த கருத்துகள், முதன்மையாக, விதியிழக்கப்போவதாக கருதப்பட்ட பெரியாரின் வர்ணாசிரம எதிர்ப்பு மற்றும் சமத்துவ அரசியல் கோட்பாடுகளை மீண்டும் பேசவைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் சாதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக தனது அரசியல் நகர்வைத் தெளிவாகத் துவக்கியுள்ளார். இது, பொதுவாக, திராவிட இயக்க கட்சிகளுக்கும், அவர்களின் கொள்கைகளுக்கும் சவாலாக அமையக் கூடும்.
Source :Vijay latest speech
விஜயின் கருத்துகளும் திருமாவும்:
விஜய் பேசிய "ஆட்சியிலும் பங்கு" என்ற கோரிக்கை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவை தொடர்ச்சியாக பேசிவரும் ஒரு முக்கியமான கோரிக்கையாகும். திருமா அவர்கள் தமிழ்நாடு அரசியலில் நீண்டகாலமாக சாதிய அமைப்புகள் மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக பேசிவருபவர். விஜயின் இந்த உரை, திருமாவின் கருத்துக்களை ஒட்டியதாகவே உள்ளது.
❤அதிகாரத்திலும் பங்கு
❤போதை ஒழிப்பு
❤வர்ணாசிரம எதிர்ப்பு
இவை அனைத்தும் தொடர்ச்சியாக அண்ணன் திருமா அவர்கள் பேசி வருவது தான்.அதையே இன்று விஜய் அவர்கள் உரைத்து பேசியிருக்கிறார் இவையெல்லாம் நாம் உண்ணிப்பாக கவனித்து பார்க்க வேண்டும் ஏனென்றால் திராவிட கட்சிகளிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிவரும் காலங்களில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று தேர்தல் நேரத்தில் உறுதியாக கேட்போம் என்பதை இன்று முதல் மாநில மாநாட்டிலே விஜய் அவர்கள் வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்றால் தமிழக அரசியல் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமா அவர்களைச் சுற்றியே சுழல்கிறது என்பதுதான் உண்மை. திராவிட முன்னேற்றக் கழகத்தை விஜய் அவர்கள் நேரடியாக விமர்சனம் செய்திருக்கிறார் என்றால் அதில் நம்முடைய கோரிக்கையும் சேர்ந்தே தான் இருக்கிறது என்றே தோன்றுகிறது
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை முழுமையாக உள்வாங்கி நேரடியாக விடுதலைச் சிறுத்தைகளை முன்னிறுத்தி பேசியிருக்கிறார் ஆனால் தவறியும் கூட பாமக போன்ற அமைப்புகளை ஒரு இடத்திலும் கூட அவர் பேசவில்லை என்றால் தெளிவாக தெரிகிறது சா..திய மத..வாத சக்திகளை எதிர்த்துதான் அவரின் அரசியல் நகர்வு இருக்கப்போகிறது. மாநாட்டின் வெற்றியைப் போன்றே அவர் தேர்தல் அரசியலிலும் தாக்குப்பிடித்து . பொறுத்திருந்து பார்ப்போம் அவரின் நகர்வு எப்படி இருக்க போகிறது என்று..
பா. ரஞ்சித்தின் பாராட்டு:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்க்கிறேன் மகிழ்ச்சி
Source : Link
விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் கருத்து:
திரு விஜய் நடத்திய மாநாடு, அதில் அவருடைய பேச்சு- இத பத்தி அவர் பாணியிலேயே சொல்லணும்னா இது ஒரு ட்ரெய்லர். ஒரு சினிமாவோட ட்ரெய்லர்ல அதுல இருக்கிற முக்கியமான விஷயத்தையெல்லாம் வெட்டித் தொகுத்து மக்களை ஈர்க்கிற மாதிரி கொடுப்பாங்க. ட்ரெய்லருடைய நோக்கம் மக்களை தியேட்டரை நோக்கி வரவழைக்கணும் என்பதுதான். அந்த மாதிரி இந்த மாநாட்டுல அவருடைய பேச்சு ஒரு ட்ரெய்லர் மாதிரி அமைஞ்சிருக்கு. முழு நீள படம்னா அது அரசியல் களத்துல அவரு எப்படி பெர்ஃபார்ம் பண்ணப் போறார் என்பதுதான். ஒரு படத்தை முழுமையா பாத்துட்டு தான் அதைப் பற்றிய மதிப்பீட்ட சொல்ல முடியும். ஒரு ட்ரெய்லரைப் பார்த்துட்டு இந்தப் படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடும், கோல்டன் ஜூப்ளி கொண்டாடும்னு சொல்றதோ அல்லது இந்த படம் ஃப்ளாப் ஆயிடும்னு சொல்றதோ சரியா இருக்காது. மாநாட்டை நடத்தி இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு. அவருடைய பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்குனு பார்ப்போம். அதன் பிறகு அதைப் பற்றி சொல்லலாம். அதுக்குள்ள இந்த மாநாட்டை வச்சு அவரைக் கொண்டாடுவதும் தேவையில்லை, அவரை நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
விசிக ஆதவ் அர்ஜுனா அவர்களின் கருத்து:
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் திரு. விஜய். அவருக்கு வாழ்த்துகள்.எல்லோருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்.
சமூக நீதியின் அடிப்படையில் எதிர்கால அரசியலுக்கான முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
Tags
political