நாம் தமிழர் சீமான் அவர்கள் பேசியது
முதல்வராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமா அவர்களுக்கு. அனைத்து தகுதிகளும் உள்ளன; அவரை நாங்கள் ஆதரிப்போம் அவரை எப்படியாவது முதல்வர் ஆக்குவோம்; இதில், என்னை விட மகிழ்ச்சியடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது. என்னுடைய அரசியல் குருநாதர் திருமா அவர்கள்தான் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர் எங்க அண்ணன் திருமா தான்.. இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறியுள்ளார்
திருமாவளவன்: சீமானின் ஆதரவும் அரசியல் மோதல்களும் :
சமீபத்தில் தமிழ் அரசியல் களத்தில் முக்கியமான விவாதமாக குளிர்ந்தது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாஜக சார்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோரின் கருத்து மோதல். இந்த விவாதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவனை மையமாகக் கொண்டு நகர்த்துகின்றனர் சீமானின் இந்த கருத்து, அரசியல் தளத்தில் மிகவும் பேசப்பட்டு வருகின்றது
ஆதவ் அர்ஜுன் அவர்கள் பேசிய கருத்து:
"திரைப்படங்களில் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தவர்கள் முதல்வராகும் போது, 40 ஆண்டுகள் மக்களுக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் இந்த மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும், அரசியல் அனுபவம் கொண்ட தொல். திருமாவளவனை துணை முதல்வராக நாங்கள் விரும்புவது தவறில்லை" என்று ஆதவ் அர்ஜுனா பேசியது சமீபத்தில் இணையத்தில் வைரலாக அரசியல் களத்திலும் வைரலாக பேசப்பட்டு இருந்தது
சிந்தனைச் செல்வனின் பதில் :
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எல். முருகன் அவர்களை கண்டித்துள்ளதே விடுதலைச்சிறுத்தைகளுக்கு அவரின் ஆதரவைக் காட்டுகிறது. அவருடைய ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால், விடுதலைச்சிறுத்தைகள், ஒட்டுமொத்த அருந்ததிய சமூகத்தையும் "தமிழர் அல்லாதவர்கள்" என மொழிவழி தேசிய பார்வையில் சிறுமைப்படுத்துவதையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
மேலும் படிக்க: link
ஆர். எஸ். பாரதி பதில்:
இந்த விவாதத்தில் ஆர். எஸ். பாரதி, திருமாவளவன் முதல்வராக ஆவார் என்ற சீமானின் கருத்துக்கு மறுப்பளித்தார். "திருமாவளவன் மு. க. ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவரையே முதல்வராக வேட்பாளராக அறிவித்துள்ளார்" என்றார். சீமான் திருமாவளவனுக்கு மாய வலை போடுகிறார், ஆனால் திருமா அந்த வலையில் சிக்கமாட்டார் என்று பாரதி கூறியுள்ளார்
மொத்தத்தில், திரு. திருமாவளவனை மையமாகக் கொண்ட சீமான், சிந்தனைச் செல்வன் மற்றும் ஆர். எஸ். பாரதியின் கருத்துக்கள், தமிழ் அரசியலில் உருவாகும் புதிய அரசியல் அலைகளை பிரதிபலிக்கின்றன.
விடுதலைச்சிறுத்தைகளை ஒரு குறிப்பிட்ட சா...திக்கு மட்டுமான கட்சி என குறுக்க முனையும் பாஜக எல் முருகனின் அவதூறுகளும் ஒருபோதும் மக்களிடத்தில் எடுபடாது
மேலும் படிக்க:link
மேலும் படிக்க:link
Tags
political