மகாராஷ்டிரா சட்டமன்ற பொது தேர்தல், மாநில அரசியல் வரலாற்றில் முக்கியமான எதிர்பார்ப்பை உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் புதிய கூட்டணி ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தல் (RJD) கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்துள்ளன இது மிகவும் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது . இந்த கூட்டணி மகாராஷ்டிரா அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மக்களிடத்தில் இருக்கின்றது.
கூட்டணியின் தொகுதி பங்கு:
இந்த தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில், ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கே உரிய பகுதியில் போட்டியிட்டு, மக்களின் ஆதரவை பெற முயற்சிக்கின்றன. குறிப்பாக, இந்த கூட்டணி வலுவாக உள்ள இடங்களில் வெற்றி பெறுவது உறுதி எனக் கருதப்படுகிறது.இதில் விடுதலை சிறுத்தை மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விசிக போட்டியிடும் தொகுதிகள்:
1. கங்காபூர்
2. பத்நாபூர்
3. நன்டெட் (தெற்கு)
4. ஹிங்கோலி
5. கல்மனுரி
6. வாஸ்மாட்
7. தெக்லூர்
8. அவுரங்காபாத் (மையம்)
9. முள்ளன்ட் (மும்பை)
10. கன்னட்
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை மிகவும் தீவிரமாக களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். விவசாயிகள் தொழிலாளர்கள், மக்கள் ஆகியோரின் ஆதரவை பெறுவதே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் அவர்களின் பங்கு
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இந்த கூட்டணியின் தலைமை நிலையை எடுத்துக்கொண்டு மிகவும் தீவிரமாக மக்களிடத்தில் செயல்படுகிறார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன் கொண்டு வருவதில் அவர் முன்னணியில் உள்ளார்., மக்களின் நலனுக்காகவும் சமத்துவ அரசியல் அடிப்படையிலும் செயல்படுவதை வலியுறுத்தி வருகிறார். இந்த கூட்டணி, தமிழகத்தைத் தாண்டி மகாராஷ்டிராவிலும் தங்கள் சமூக மற்றும் அரசியல் சிந்தனைகளை நிலைநாட்ட விரும்புகின்றனர்.இது தொண்டர்களின் விருப்பம் கூட
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், விசிக-RJD கூட்டணி, மாநிலத்தின் அரசியல் சூழலை மாற்றக்கூடிய வலிமை வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சமூக நீதி, சமத்துவம் போன்ற அடிப்படைக் கோட்பாடுகள் இருக்கும் என்று மக்களிடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது